குடியிருப்பு பகுதியில் சிக்கிய மலைப்பாம்பு

திருப்பரங்குன்றம், டிச.1:  நாகமலை புதுக்கோட்டை அருகில் குடியிருப்பு பகுதியில் புகுந்த 8 அடி நீள மலைப் பாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். நாகமலை புதுக்கோட்டை அருகே ராஜம்பாடி பகுதியில் குடியிருப்பு வீடுகளுக்கு நடுவில் மலைப்பாம்பு நுழைந்து விட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டனர். அந்த பாம்பு 8 அடி நீளமும், 9 கிலோ எடையும் இருந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் மலைப்பாம்பு நாகமலை வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Related Stories:

>