×

கோவையில் தொடரும் மழை

கோவை, டிச. 1:  கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஒட்டிகள் தவிக்கிறார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி துவங்கியது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்தது. கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நாள் முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. பகல் நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் மழையும் பெய்கிறது. இது போன்ற காலநிலை பல வருடங்களுக்கு பிறகு அமைந்துள்ளதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  \இதனிடையே குமரிக்கடல் மற்றும் வங்க கடலில் நிலவும் காற்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2  நாட்களுக்கு மழை பெய்யும் என கூறப்படுகிறது.கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பெரியநாயக்கன்பாளையத்தில் 11 மி.மீட்டரும், சூலூரில் 14 மி.மீட்டரும், மேட்டுப்பாளையத்தில் 14.4 மி.மீட்டரும், கோவை தெற்கு 35 மி.மீட்டரும் என மொத்தம் 107 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 7.18 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக லங்க கார்னர் பாலம், கிக்கானி பள்ளி சாலை பாலம், சிவானந்தாகாலனி செல்லும் பாலம், வடகோவை மேம்பாலம் கீழ் பாலம், அவினாசி மேம்பாலம் கீழ் பாலம் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடக்கிறது, மழை காரணமாக அந்த பகுதிகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதேபோன்று மழை காரணமாக பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Goa ,
× RELATED தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7...