×

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிப்பு மும்முரம்

நாமக்கல், நவ.29:  கார்த்திகை தீப திருநாள் அடுத்த மாதம் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.  கார்த்திகை மாதம் பிறந்தது முதல் பெண்கள் வீட்டின் வாசலில் தினமும் மாலையில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவது வழக்கம். கார்த்திகை தீப திருநாள் அன்று வீடு, கோயில்கள் முழுவதும் அகல் விளக்குள் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் அருகேயுள்ள போடிநாயக்கன்பட்டியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதியை சேர்ந்த 2 குடும்பத்தினர், பல ஆண்டாக அகல் விளக்குகளை தயாரித்து வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஒரு முகம், இருமுகம், பஞ்சமுகம் மற்றும் பல வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. இதில் சிறிய சைஸ் அகல் விளக்குகள் 60 முதல் 70 பைசா வரை விலை நிர்ணயித்து வியாபாரிகள் மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

Tags : Karthik Deepam ,
× RELATED தடையை மீறி மலை மேல் கார்த்திகை தீபம்...