×

விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு

திருமங்கலம், நவ.29: திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள 38 ஊராட்சிகளிலும் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமங்கலம் ஒன்றிய ஆணையாளர் உதயகுமார் கூறியதாவது, ‘திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான முதலில் 10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க தேவையான இடங்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் வருவாய்த்துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை மற்றும் வேளாண்மை, அங்கன்வாடி அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமும் கலந்து பேசி விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். இதேபோல் மீதமுள்ள ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.

Tags : location ,playground ,
× RELATED ரெடி என்றதும் கோல்ஃப் விளையாடலாம்!