×

கோவை அரசு மருத்துவமனையில் அனாதையாக விடப்பட்ட குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை, நவ. 29: கோவை அரசு மரு்ததுவமனையில் அனாதையாக விடப்பட்ட பெண் குழந்தை  காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனைக்கு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 23ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஒரு கிலோ 780 கிராம் மட்டுமே இருந்தது. குழந்தை எடை குறைவாக இருந்ததால் மருத்துவர்கள் தீவிர குழந்தைகள் சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், குழந்தையின் தாய் கடந்த 4ம் தேதி குழந்தையை மருத்துவமனையில் விட்டு சென்று விட்டார். பின்னர், குழந்தையை மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வந்தனர். தாய் பால் வங்கியின் மூலம் குழந்தைக்கு பால் கொடுக்கப்பட்டு வந்தது. தொடர் கண்காணிப்பினால், தற்போது குழந்தை 2 கிலோ 180 கிராம் எடை உள்ளது. இதனையடுத்து, குழந்தையை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குழந்தையை நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம், கோவை அரசு மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ சவுந்திரவேல் ஒப்படைத்தார். குழந்தைக்கு நந்தனா என பெயரிடப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,Government Hospital ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...