×

அ.தி.மு.க. பிரமுகர் விடுதிக்கு குறைவான வரி விதித்திருப்பதாக புகார்

திருப்பூர்,  நவ. 28:  திருப்பூரில் அ.தி.மு.க. பிரமுகரின் தங்கும் விடுதிக்கு மாநகராட்சி  அதிகாரிகள் குறைந்த அளவு வரி விதித்திருப்பதாக சமூக வலைதளங்களில் புகார்  எழுந்த நிலையில், அது பழைய கட்டிடத்திற்கான ரசீது என மாநகராட்சி விளக்கம்  அளித்துள்ளது. திருப்பூர் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான  தங்கும் விடுதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருப்பூர் மாநகராட்சி  அலுவலகம் அருகே கட்டப்பட்டது. இந்த விடுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள்  குடியிருப்பு என குறைந்த கட்டணத்தை வரியாக விதித்துள்ளதாக சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து, ஒரு நிகழ்ச்சியில்  பங்கேற்பதற்காக வந்த மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் நிருபர்கள்  கேட்டபோது, இது குறித்து நான் இதுவரை கேள்விப்படவில்லை. விசாரித்து உரிய  முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாநகராட்சி அதிகாரிகளிடம்  கேட்டபோது, சமூக வலைதளங்களில் பரவி வருவது 2017ம் ஆண்டுக்கான ரசீது.  அப்போது, தங்கும் விடுதி கட்டப்படவில்லை.

அப்போது அந்த இடத்தில் ஒரே ஒரு  அறை உள்ள சிறிய கட்டிடம் மட்டுமே இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பெரிய அளவில் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. வரி உயர்வு பிரச்னை காரணமாக  நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது, இப்பிரச்னைக்கு தீர்வு  காணப்பட்டுள்ள நிலையில், விடுதிக்கான வரி விதிக்கப்படும் என்றனர்.

Tags : Digg ,complainant ,premier ,
× RELATED பசுபதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை