×

குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கோவை, நவ. 28:  உக்கடம் ஜி.எம்.நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் புழு மற்றும் சாக்கடை நீர் வாடை வருகிறது எனக்கூறி மாநகராட்சி அலுவலகத்தை ஜி.எம். நகர் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். கோவை உக்கடம் ஜி.எம். நகர் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருக்கின்றன. இந்தப் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறப்படுகின்றது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், கழிவுநீர் கலப்பதை சரி செய்யவில்லை என கூறப்படுகின்றது.

இதனையடுத்து, ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். கழிவுநீர் கலந்த பாட்டில்களுடன் வந்த அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Civilians ,office ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...