×

கடலாடி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு விரைந்து கட்டி முடித்த பயனாளிகளுக்கு பரிசு பிடிஓ வழங்கினார்

கலசபாக்கம், நவ.28: கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளை விரைந்து கட்டி முடித்த பயனாளிகளுக்கு பிடிஓ பரிசு வழங்கினார். பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கலசபாக்கம் ஒன்றியத்தில் ₹1.70 லட்சம் மதிப்பில் வீடு கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை ஊக்குவிக்கும் விதத்தில், கலசபாக்கம் அடுத்த கடலாடி ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடித்த பயனாளிகளுக்கு நேற்று பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வீடு கட்டிய பயனாளிகளுக்கு பிடிஓ அன்பழகன் பரிசு வழங்கி பாராட்டினார். இதில் துணை பிடிஓ செல்வி, ஊராட்சி செயலாளர் ெசந்தில் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : PDO ,House ,
× RELATED டூவீலர் மீது கார் மோதி சிறுவன், வாலிபர் பலி