×

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தினகரன் அறிவொளி திட்ட கல்வி மலர் வழங்கல்

தூத்துக்குடி, நவ.28: சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு தினகரன் நாளிதழ் அறிவொளி திட்டத்தின்கீழ் பியர்ல் அரிமா சங்கம் சார்பில் கல்வி மலர் வழங்கப்பட்டது.
தினகரன் நாளிதழின் அறிவொளி திட்டத்தின்கீழ் தூத்துக்குடி சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு தூத்துக்குடி பியர்ல் அரிமா சங்கம் சார்பில் கல்வி மலர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பியர்ல் அரிமா சங்க தலைவரும், ரத்னா ஏஜென்ஸி உரிமையாளருமான தர்மராஜ் மற்றும் டி.ஏ.சில்க்ஸ் உரிமையாளர் டி.ஏ.தெய்வநாயகம் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு கல்விமலர் புத்தகங்களை வழங்கினர்.
இதில் பள்ளி தலைமையாசிரியை ரூபீனா ரொட்ரிகோ மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதேபோன்று சோரீஸ்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அபி நிறுவனங்களின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்விமலர் புத்தகங்களை பள்ளி தலைமையாசிரியை ஜாய்பெல் வழங்கினார்.

Tags : school children ,
× RELATED காலை உணவு திட்டத்தின் கீழ் 37,757 பள்ளி குழந்தைகள் பசியாறுகிறது