×

ஜல்லிப்பட்டி கிராமத்தில் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்

உடுமலை, நவ. 27: ஜல்லிப்பட்டி கிராம பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்து காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உடுமலை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஜல்லிப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, மொச்சை, நிலக்கடலை, தக்காளி பயிரிட்டுள்ளனர். இதனால் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவில் தோட்டத்துக்குள் புகும் காட்டுப்பன்றிகள், நிலக்கடலை, மொச்சை பயிர்களை தோண்டி நாசம் செய்கின்றன. மேலும் தென்னை மரங்களுக்கு பாய்ச்சும் சொட்டு நீர் பாசன குழாய்களை கடித்து சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ‘காட்டுப்பன்றிகளை விரட்டும்படி வனத்துறையினரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால் அதை தடுக்க முடியாது என வனத்துறையினர் கைவிரித்துவிட்டனர். நாங்களே விரட்ட முயன்றால் கடிக்க வருகிறது. இதனால் உயிருக்கு ஆபத்து உள்ளது. காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. இதனால் பயிர்கள் சேதமாகி, எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : Jallipatti ,village ,
× RELATED உடுமலை அருகே திடீர் சாலை மறியல்