×

கேர்ன்ஹில் வனத்தில் விளையும் காட்டு ஸ்ட்ராபெரி பழங்கள்

ஊட்டி, நவ. 27: ஊட்டியில் கேர்ன்ஹில் வனப்பகுதி உட்பட பல்வேறு பகுதிகளிலும் காட்டு ஸ்ட்ராபெரி பழங்கள் அதிகளவு காணப்படுவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பறித்து ருசித்து வருகின்றனர். நீலகிரியில் தவிட்டு பழம், நாவல் பழம், தாட்பூட், பிக்கி மற்றும் ஸ்ட்ராபெரி பழங்கள் மிகவும் பிரபலமானவை. இந்த பழங்கள் அடர்ந்த காடுகளில் காணப்படுகிறது. இதனை சிலர் பறித்து வந்து விற்பனை செய்கின்றனர். இதில், ஸ்ட்ராபெரி பழங்கள் சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த பழங்கள் விற்பனைக்காக கொண்டு வருவதில்லை. எனினும், வனங்களுக்கு பல்வேறு தேவைகளுக்காக செல்லும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் பறித்து சுவைக்கின்றனர்.தற்போது ஊட்டி அருகேயுள்ள கேர்ன்ஹில் வனப்பகுதிகள், அவலாஞ்சி மற்றும் அப்பர்பவானி போன்ற பகுதிகளில் சாலையோரங்களிலேயே இந்த வொய்ல்டு ஸ்டாராபெரி எனப்படும் காட்டு ஸ்ட்ராபெரி பழங்கள் அதிகளவு விளைந்துள்ளன. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தற்போது இந்த பழங்களை சுவைத்து மகிழ்கின்றனர்.

Tags : Cairnhill Forest ,
× RELATED தேசிய பசுமைப்படை சார்பில் கேர்ன்ஹில்...