×

வக்கீல்கள் சட்ட நாள் உறுதி மொழி ஏற்பு

மதுரை, நவ. 27: இந்திய அரசியலமைப்பு சட்டம் அரசியல் நிர்ணய சபையால் கடந்த 26.11.1949ல் ஏற்றுக் ெகாள்ளப்பட்டது. இந்த நாளை நாடு முழுவதும் வக்கீல்கள் ஆண்டு ேதாறும் சட்ட நாளாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ஐகோர்ட் மதுரை கிளை வழக்கறிஞர்கள் சங்கங்களின் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. எம்பிஎச்ஏஏ-எம்பிஏ சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வெள்ளைச் சாமியின் 3ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் சட்டநாள் நிகழ்ச்சி நடந்தது. ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சட்டநாள் உறுதிமொழியை வாசித்தார். அப்போது வக்கீல்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.இதில், சங்க நிர்வாகிகள் துரைப்பாண்டியன், மகேந்திரபதி, ராமமூர்த்தி, வெங்கடேசன், மூத்த வக்கீல் வீராகதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், எம்எம்பிஏ சங்கத்தின் தலைவர் மூத்த வக்கீல் கிருஷ்ணவேணி தலைமையில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில், நிர்வாகிகள் இளங்கோ, சீனிவாச ராகவன், சுபாஷ்பாபு, வெயில்கனி ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் சார்பிலும் நேற்று சட்ட நாள் கொண்டாடப்பட்டது. தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் இளங்கோ வரவேற்றார். செயல் தலைவர் மூத்த வக்கீல் ஆதித்தன் சிறப்புரையாற்றினார். வக்கீல்கள் பொன்னுதுரை, தானேஷ்வரன், வேலுச்சாமி, முத்துகுமார், நிறைகுளத்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பொருளாளர் அலிசித்திக் நன்றி கூறினார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் உறுதி மொழி கமிஷனர் விசாகன் தலைமையில் எடுக்கப்பட்டது. இதேபோன்று அனைத்து மண்டலங்களிலும் உதவி ஆணையாளர்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் உதவி ஆணையாளர்கள் பிரேம்குமார், ஜெயராமராஜா, செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், சுகாதார அலுவலர் சிவ சுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Attorneys ,
× RELATED தமிழ்நாடு அரசின் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் இருவர் ராஜினாமா