×

புறம்போக்கில் நீண்டகாலமாக குடியிருப்போருக்கு பட்டா தாலுகா அலுவலகங்களில் மார்க்சிஸ்ட் மனு

திண்டுக்கல், நவ. 27: திண்டுக்கல் மாவட்டத்தில் புறம்போக்கு இடங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வரும் ஏழை குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனுக்கள் அளித்தனர். வண்டிப்பாதை, மந்தை, பாறை உள்ளிட்ட ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் வீடுகளுக்கு அரசு ஆணை 318/19ன் படி உடனடியாக பட்டா வழங்கிடவும், நீர்நிலை புறம்போக்கில் குடியிருக்கும் மக்களுக்கு மாற்று இடமும், வீடும் கட்டி தரவேண்டும்.

கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டுக்கு சொந்தமான நிலங்களில் நீண்டநாட்களாக குடியிருக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் கிரையம் செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பித்துள்ள தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர், விதவை உதவித்தொகை வழங்கிட வேண்டும். குதியிருந்தும் ரத்து செய்துள்ள பயனாளிகளுக்கு மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு தாலுகா அலுவலகங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநில குழு பாண்டி, மாவட்டக்குழு கருப்புசாமி, நகர செயலாளர் ஆசாத், ஒன்றிய செயலாளர் அஜாய் கோஷ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

*குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகிக்க, ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். முன்னதாக குஜிலியம்பாறை பஸ்ஸ்டாண்டு சாலையில் இருந்து ஊர்வலம் துவங்கி கடைவீதி, காமராஜர் சிலை சாலை, ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலை வழியாக தாலுகா அலுவலகம் சென்றடைந்தனர். அதைத்தொடர்ந்து 84 பேர் பட்டா கோரி விண்ணப்ப மனுவை தாலுகா அலுவலகத்தில் கொடுத்தனர். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஜெயபால், பாலசுப்பிரமணியன், சவுந்திரராஜன், சண்முகவேல், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு செயலாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் தெய்வேந்திரன், குணசீலன், தண்டபாணி, கந்தசாமி, செந்தில், பாண்டியன், ராமர், கண்ணன், ஜீவா, சண்முகம், பாண்டியம்மாள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதமக்கள் கலந்து கொண்டனர். *நத்தம் தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமை வகிக்க, மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், தாலுகா செயலாளர் சின்னகருப்பன், முன்னாள் கவுன்சிலர் விஜயவீரன் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தனி துணை தாசில்தார் மாயழகரிடம் மனு அளித்தனர். இதில் விவசாய தாலுகா உறுப்பினர்கள் தவநூதன், வெள்ளைச்சாமி, பொன்னுச்சாமி மற்றும் கிராமமக்கள் பலர் பங்கேற்றனர். *பழநி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். இதில் நகர செயலாளர் கந்தசாமி, நகர்க்குழு உறுப்பினர் குருசாமி மற்றும் 300க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Marxist ,offices ,Pattu Taluk ,residents ,
× RELATED மீனவரை தாக்க முயன்றவர்கள் மீது...