×

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 9 மாதங்களாக போராடும் டெல்லி விவசாயிகள்!: ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்..!!

டெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் 9 மாதங்களை கடந்துள்ள நிலையில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் டெல்லி எல்லையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டிராக்டர்களை வீடுகளாக மாற்றி மழை, வெயிலை பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என்றும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 26ம் தேதி தொடங்கிய இப்போராட்டம் 9 மாதங்களை கடந்துள்ளது. பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.இதனிடையே அண்மையில் ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது அம்மாநில போலீசார் நடத்திய தடியடி தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடரும் விவசாயிகளின் போராட்டத்தால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கும், டெல்லி, உத்திரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. …

The post புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 9 மாதங்களாக போராடும் டெல்லி விவசாயிகள்!: ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,National Human Rights Commission ,Union Govt Report ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரண...