×

சிவந்திபுரம் பஞ்சாயத்தில் விழிப்புணர்வு முகாம்

வி.கே.புரம், நவ. 27:  சிவந்திபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து ராஜ் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் பங்கேற்ற 9ம் வகுப்பு மாணவிகளுக்கு ஊராட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்யம், கிராம ஊராட்சி தலைவர் மக்களுக்கு ஆற்றும் பணிகள், தலைவர் அதிகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டது. ஊராட்சி செயலாளர் வேலு வரவேற்றார். மண்டல துணை பிடிஓ  முருகப்பா, அமலி மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இனிகோ சிறப்புரையாற்றினர். சுகாதார மேற்பார்வையாளர் பெல்பின் நன்றி கூறினார்.

Tags : Awareness Camp ,Sivanthipuram Panchayat ,
× RELATED எரிவாயு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்