×

சேத்தூரில் சுகாதாரச் சீர்கேடு நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம், நவ. 26:  சேத்தூர் பேரூராட்சி 10வது வார்டில் உள்ள பஸ்நிலையத்தைச் சுற்றி, வாறுகால்களை தூர்வாராததால், சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. பஸ்நிலையத்தின் தென்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிப்பறை கழிவுகள் கலக்கப்படுகின்றன. இப்பகுதியில் குடிநீர் குழாய் இருப்பதால், குடிநீரில் கழிவுநீர் கலந்து சுகாதாரக்கேடு ஏற்படும் அவலம் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்ககோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேத்தூர் நகர் குழு சார்பில் காத்திருக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு, சேத்தூர் நகர செயலாளர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், ஒன்றிய செயலாளர் தங்கவேல், செட்டியார்பட்டி முன்னாள் சேர்மன் நீராத்திலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சந்தனகுமார், பொன்னுச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில், ‘கழிவுநீர் கால்வாய்க்கு மூடி அமைக்கவும், குடிநீர் குழாயை சாலையின் மறுபக்கம் அமைக்கவும் வலியுறுத்தி கோஷமிட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன், பேரூராட்சி கிளர்க் தனலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தி டிச.10ம் தேதிக்குள் நடவடிக்கை எடுப்பதாக  எழுத்து பூர்வமாக தெரிவித்ததால், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Demonstration ,
× RELATED விவசாயிகளுக்கு உரக்கட்டு செயல்விளக்க பயிற்சி