×

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயுடன் மனு அளிக்க வந்த 2 பேர்

திண்டுக்கல், நவ. 26: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த 2 பேரிடம் மண்ணெண்ணெய் இருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.திண்டுக்கல் அருகே அகரம் கிராமம் விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆலம்மாள். இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மனு அளிக்க வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதித்ததில் ஆலம்மாளின் பையில் மண்ணெண்ணெய் கேன் இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மண்ணெண்ணெய்யை கைப்பற்றி கீழே ஊற்றி அவரை எச்சரித்து, மனு அளிக்க அனுப்பி வைத்தனர். பின்னர் ஆலம்மாள், கலெக்டர் விஜயலட்சுமியிடம் அளித்த மனுவில், ‘எனது வீட்டிற்கு எனது கணவர் பெயரில் வீட்டு வரி ரசீது பெற்று வந்தோம். கணவர் இறந்த பின்பு எனது பெயருக்கு வீட்டு வரி ரசீது கேட்டு பலமுறை மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது பெயரிலே வீட்டு வரி ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.


Tags : Dindigul Collector ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...