×

அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட ‘ஜல்சக்தி மிஷன்’ பணியில் முறைகேடு

* உத்தமபாளையம் அருகே புகார்* கிராம மக்கள் சாலை மறியல்உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே, அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட ஜல்சக்தி மிஷன் திட்டப்பணியில் தரமில்லை எனவும், குடிநீர் வராததைக் கண்டித்தும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம், உ.அம்மாபட்டி ஊராட்சியில் அம்பாசமுத்திரம், கருக்கோடை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பத்தினருக்கு குடிநீர் வழங்குவதற்காககடந்த அதிமுக ஆட்சியில், ‘ஜல்சக்தி மிஷன்’ திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், புதிய குடிநீர் தொட்டிகள், குடிநீர் பகிர்மான குழாய்கள், உறை கிணறுகள், குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டுவதற்கு பேக்கேஜிங் முறையில் டெண்டர் விட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், உஅம்மாபட்டி ஊராட்சியில் உள்ள 4வது வார்டு மஞ்சக்குளம் பகுதியில் ஜல்சக்தி திட்டத்தின் கீழ், 15 நாட்களுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் பிவிசி பைப்புகள் தரமின்றி உடைவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வருவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். எனவே, ஜல்சக்தி திட்டப் பணிகளை தரமாக மேற்கொள்ள வலியுறுத்தி, உத்தமபாளையம்-உ.அம்மாபட்டி சாலையில் திடீரென பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உத்தமபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் திலகம், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘உ.அம்மாபட்டி கிராமத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்குவதற்காக ஜல்சக்தி மிஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக ரூ.1.76 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால், பதிக்கப்பட்ட பைப்புகள் தரமில்லாமல் உடைகின்றன. 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. குடிநீர் பிரச்னையை தீர்க்க யூனியன் அதிகாரிகள் வரவில்லை என்றனர்….

The post அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்ட ‘ஜல்சக்தி மிஷன்’ பணியில் முறைகேடு appeared first on Dinakaran.

Tags : Uttampalayam ,Jalshakti ,Dinakaran ,
× RELATED சட்டம் சார் தன்னார்வலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்