×

புறம்போக்கு நிலத்தில் தனிநபர்களுக்கு பட்டா வழங்க மக்கள் எதிர்ப்பு

நாமக்கல், நவ.26: பரமத்தி அருகே உள்ள வசந்தபுரம் கிராம மக்கள், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் மெகராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: வசந்தபுரத்தில் உள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தை, நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றி, தனிநபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதாக தெரியவருகிறது. வசந்தபுரத்தில் 1,500 பேர் வசித்து வசிக்கிறார்கள்.  ஊருக்கு என்று தனியாக மயானம் இல்லை. எனவே, இந்த புறம்போக்கு நிலத்தில், 40 சென்ட் நிலத்தை மயானத்துக்கு இடஒதுக்கீடு செய்து, திருச்செங்கோடு ஆர்டிஓ முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்பட்டும், இதுவரை  மயானம் அமைக்கப்படவில்லை. எனவே, புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து, தனிநபர்களுக்கு வழங்க கூடாது. மேலும், அங்கு அரசு அலுவலகங்கள் கட்ட, எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : individuals ,outskirts ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...