×

ஆம்புலன்ஸ் ஊழியர் பணிக்கு 20 பேர் தேர்வு

நாமக்கல், ஜூன் 10: நாமக்கல்லில் நடந்த நேர்முக தேர்வில், கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் பணிக்கு 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல்லில் கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, நாமக்கல் பழைய மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் நடந்தது. மண்டல மேலாளர் அறிவுக்கரசு, மாவட்ட மேலாளர் மனோஜ், வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் ஆகியோர் நேர்முக தேர்வை நடத்தினர். இதில், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட டிரைவர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களின், கல்வி சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை சரி பார்க்கப்பட்டது. இறுதியில், டிரைவர் பணிக்கு 5 பேரும், உதவியாளர் பணிக்கு 15 பேரும் என மொத்தம் 20 தேர்வு செய்யப்பட்டனர்.

The post ஆம்புலன்ஸ் ஊழியர் பணிக்கு 20 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Old District Government Hospital ,Dinakaran ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் கட்டுப்படுத்த வழிமுறை