×

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் மரம் கடத்திய 8 பேருக்கு ₹3 லட்சம் அபராதம்

தேன்கனிக்கோட்டை, நவ.26:  தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் மரம் வெட்டி கடத்திய குற்றத்திற்காக 8 பேரிடம் ₹3 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் சுகுமார் தலைமையில், வனவர் கதிரவன் மற்றும் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது காப்பு காட்டில் மரம் வெட்டிய 8 பேரை பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

அதன்படி, வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து மரம் வெட்டி குற்றத்திற்காக, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அகரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் மகன் முனிராஜ்(33) என்பவருக்கு ₹1 லட்சமும், அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ்(56), முரளி(30) ஆகிய இருவருக்கு ₹45 ஆயிரமும், மாரண்டஹள்ளியை சேர்ந்த சண்முகம்(60), சுந்தர்(59), ஜெயகுமார்(34) ஆகியோருக்கு தலா ₹50 ஆயிரமும், போலாக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பைரப்பா(25), முத்தமாதப்பா(35) ஆகிய இருவருக்கு ₹10 ஆயிரம் என மொத்தம் ₹3 லட்சம் அபராதம் விதித்தனர். பின்னர், அவர்களை விடுவித்தனர்.

Tags : persons ,forest ,
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...