×

உடன்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் மழைநீர் தேக்கம் குலசை தருவைகுளம் தடுப்பணையை உடைக்க முயற்சி?

உடன்குடி, நவ. 26: உடன்குடி அனல்மின் நிலைய வளாகத்தில் தேங்கி
நிற்கும் மழைநீரை வெளியேற்ற முடியாமல் ஊழியர்கள் திணறி வருகின்றனர். இதனால் குலசேகரன்பட்டினம்   தருவைகுளத்திற்கு தண்ணீர் வரும் தடுப்பணையை உடைத்து மழைநீரை வெளியேற்ற   முயற்சி நடப்பதாக தகவல் பரவி பொதுமக்கள்   திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடன்குடி கல்லாமொழி பகுதியில்   அனல்மின் நிலையம், துறைமுகம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து   வருகிறது. அனல்மின் நிலையம் அமையும் பகுதி, நீர்ப்பிடிப்பு பகுதியாக   இருப்பதாலும், கடல் நீர்மட்டத்தை விட தாழ்வாக இருப்பதாலும் அதனை சுமார் 7   முதல் 9 அடி வரை உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. அனல்மின் நிலைய பகுதி, மழை காலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி தானாகவே   ஊற்றெடுக்கும் பகுதியாகும்.

இதன் பின்புற   சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் பகுதியையொட்டி திருச்செந்தூர் எல்லப்பநாயக்கன் குளத்தில் இருந்து குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு   தண்ணீர் ஆலந்தழை வழியாக வரும் நீர்வழித்தடம் அமைந்துள்ளது. தற்போது   அனல்மின் நிலைய பணியையொட்டி நீர்வழித்தடத்தை முறையாக பராமரிக்கவில்லை என்ற   குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக விவசாயிகள், சமூகஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக   அனல்மின் நிலைய வளாகத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்பதாகவும்,  ஆங்காங்கே ஊற்றுகள் எடுத்து தண்ணீர் பெருகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெளியிடங்களில் இருந்து மணல்களை நிரப்பும் பணியில் தொய்வு   ஏற்பட்டுள்ளது.

மேலும் எல்லப்பநாயக்கன் குளத்தில் இருந்து ஓரளவு தண்ணீர்   தருவைகுளத்திற்கு வந்து கொண்டிருப்பதால் தருவைகுளத்திற்கு முன்னால் உள்ள   தடுப்பணை நிரம்பி வழியும் நிலையில் உள்ளது. இதையடுத்து அனல்மின் நிலையத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் வகையில் தருவைகுளம் தடுப்பணையை   உடைக்க முயற்சி நடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து குலசேகரன்பட்டினத்தை   சேர்ந்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் தடுப்பணை பகுதியில் திரண்டனர். இதனால்   பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : station ,
× RELATED மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே...