×

அட்மா திட்ட செயல்விளக்கங்களை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

பாபநாசம், நவ. 26: பாபநாசம் அருகே அம்மாப்பேட்டை வட்டார அட்மா திட்டம் சார்பில் சோலார் விளக்குப்பொறி அமைத்தல், நெல் வயல் சூழலில் பசுந்தாளுர விதைகளின் பங்கு, வரப்பில் உளுந்து விதைத்தல் மற்றும் மண்புழு உரம் உற்பத்தி ஆகிய செயல்விளக்கங்கள் அமைக்கப்பட்டன.அருந்தவபுரம் கஜேந்திரன் நெல் வயலின் வரப்பில் வம்பன் 8 உளுந்து விதைத்தல் செயல்விளக்கமும், ரங்கநாதபுரம் கிராமத்தில் முன்னோடி விவசாயி ராஜேந்திரன் வயலில் சோலார் விளக்குப்பொறி செயல்விளக்கமும் அமைக்கப்பட்டது. மேலும் இடையிருப்பு கிராமத்தை சேர்ந்த சோவிந்தராஜன் வயலில் நெல் வயல் சூழலில் பசுந்தாளுர பயிர்களின் பங்கு செயல்விளக்கமும், நாகலூர் கிராம விவசாயி கண்ணபிரான் வயலில் உளுந்து செயல்விளக்கமும், ஒன்பத்துவேலி கிராமம் இயற்கை விவசாயி பிரபாகரன் வயலில் மண்புழு உர உற்பத்தி செயல்விளக்கமும் அமைக்கப்பட்டன.

இவ்வாறு அமைக்கப்படும் செயல்விளக்கங்களை விவசாயிகள் தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றாற்போல் பயன்படுத்தி செலவை குறைக்க வேண்டும். அருகிலுள்ள விவசாயிகளுக்கும் எடுத்துக்கூறி பயன்பெற செய்ய வேண்டும். அட்மா திட்ட செயல்விளக்கங்களை அமைக்க விரும்பும் பிற விவசாயிகள் தங்கள் அடிப்படை விபரங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டது.ஏற்பாடுகளை அம்மாப்பேட்டை வட்டார அட்மா மேலாளர் செல்வி, உதவி மேலாளர்கள் பிரியா, மங்களேஸ்வரி செய்திருந்தனர்.

Tags : project demonstrations ,Admob ,
× RELATED அட்மா திட்ட பயிற்சி