×

அட்மா திட்ட பயிற்சி

திண்டுக்கல், ஜன. 29: குஜிலியம்பாறை வட்டார விவசாயிகள், அட்மா திட்டம் மூலம் ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ள வேளாண்மை அறிவியல் மையம் கிரீடு சார்பில் அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். தொழிலாளர் நுட்ப வல்லுனர் அசோக் கலந்து கொண்டு, வேஸ்ட் டீ கம்போசர் பற்றியும், இதன்மூலம் எப்படி மாட்டு சாணம், இலை, தழைகளை விரைவாக மக்க வைக்கும் முறையும், சூரிய ஒளி விளக்கு, இனக்கவர்ச்சி பொறி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், அதன் பயன்பாடு பற்றியும் எடுத்து கூறினார். மேலும் நிலக்கடலை செடியில் நோய் தடுப்பு முறைகள், சூடோமோனஸ் மூலம் விதை நேர்த்தி செய்யும் முறை பற்றியும் எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED அபார வளர்ச்சியால் விரிவடையும்...