×

பெரம்பலூரில் குளிர்ந்த காற்றால் மக்கள் மகிழ்ச்சி

பெரம்பலூர், நவ.22:பெரம்பலூர் பகுதியில் குளிர்ந்த காற்றால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்யும் தருவாயில் வாகனம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை. அதிக வெப்பம் இல்லாததால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஜில்லென்ற சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : Perambalur ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...