×

சேந்தமங்கலத்தில் பயனாளிகளுக்கு ₹1.85 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சேந்தமங்கலம், நவ.22: சேந்தமங்கலத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். டிஆர்ஓ ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். சந்திரசேகரன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 1,127 பயனாளிகளுக்கு ₹1.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். விழாவில் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ‘சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 2,700 மனுக்கள் பெற்றதில் 1,127 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்களில் 8 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதியதாக 10ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. நாமக்கலில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சட்ட மற்றும் மருத்துவ கல்லூரிகள் கட்ட விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது,’ என்றார். விழாவில் நாமக்கல் ஆர்டிஓ கோட்டை குமார், தாசில்தார்கள் ஜானகி, ராஜ்குமார், நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வருதராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பாஸ்கர், ரமேஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Sandamangalam ,
× RELATED சேந்தமங்கலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்