×

வத்திராயிருப்பு அருகே கால்வாயில் பாலம் கட்டப்படுமா?

கழுத்தளவு தண்ணீரில் இறங்கி செல்லும் விவசாயிகள்
வத்திராயிருப்பு, நவ.22:  வத்திராயிருப்பு அருகே கால்வாயில் பாலம் இல்லாததால் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி மக்கள் செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பிளவக்கல் பொியாறு, கோவிலாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொியாறு அணையில் அபாய அளவை தாண்டும் முன் தண்ணீரை வௌியேற்றினர். இதன் காரணமாக முறைப்படி தண்ணீர் திறந்து விடுவதற்குள் சீவனேரி, பூாிப்பாறைக்குளம், புங்கன்குளம், பெத்தான்குளம், குணவந்தனேரி உள்ளிட்ட 16 கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு அணைநிரம்பி இத்தனை கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது. இதில் குணவந்தனேரி கண்மாய் 385 ஏக்கர் பாசன வசதி கொண்டது. இந்த கண்மாய்க்கு பிளவக்கல் பொியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. கண்மாய் முகப்பிலிருந்து கால்வாயைத்தாண்டி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
இந்த கால்வாய் வழியே வாகனங்கள் மற்றும் விவசாயிகள் சென்று வந்தனர். தற்போது தண்ணீர் ஓடுவதால் அதில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது. வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. தண்ணீர் வரும் காலங்களில் இந்த அவலநிலை நிலவுகிறது. எனவே கால்வாயில் பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : bridge ,Vatradayapuram ,canal ,
× RELATED கோடப்பமந்து கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு