×

சாத்தூரில் நாளை கலெக்டர் 24 மணிநேரம் தங்கி குறைகள் கேட்கிறார்

விருதுநகர், ஜூன் 18: சாத்தூரில் நாளை கலெக்டர் 24 மணிநேரம் தங்கி குறைகளை கேட்டறிகிறார். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தகவல்: சாத்தூர் வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாமானது நாளை காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து, இரவில் தங்கி பணியாற்ற உள்ளார். சாத்தூர் வட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை கலெக்டரை நேரில் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சாத்தூரில் நாளை கலெக்டர் 24 மணிநேரம் தங்கி குறைகள் கேட்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chatur ,Virudhunagar ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராயம் விற்பனையா? வாட்ஸ்அப்பில் புகார் கூறலாம்