×

சாணிப்பவுடர் விற்றால் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை

கோவை, நவ. 22: கோவையில் தடைசெய்யப்பட்ட சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்து கொள்பவர்கள் மற்றும் தற்கொலைக்கு முயல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார் வந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘கோவையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட சாணிப்பவுடர் விற்பது அல்லது அதை மறைத்து வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். இது தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சாணிப்பவுடர் விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் யாராவது சாணிப்பவுடர் மற்றும் தடை செய்யப்பட்ட போதை புகையிலை விற்பனை செய்வது தெரியவந்தால் 63842 00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்’’. என்றனர்.

Tags :
× RELATED ரூ.102 கோடியில் போலி பில் தயாரித்து ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ஏமாற்றியவர் கைது