மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர், நவ.20: மஞ்சூர் அருகே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த ஆகஸ்டில் துவங்கி தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்தது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியதுடன் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்தது.

தொடர்ந்து அதிகாலை வரை நீடித்த மழையில் குந்தாபாலம் அருகே மண்சரிவு ஏற்பட்டதுடன் அங்கிருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் மஞ்சூரில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறங்களிலும் இருந்து சென்ற அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சம்பவஇடத்தின் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து சென்ற நெடுஞ்சாலைதுறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு ரோட்டில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவுகளை அகற்றி சீரமைத்தனர். இந்த சம்பவத்தால் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags :
× RELATED பேரையூர் பகுதியில் தொடர் மழையால் சோளம் விளைச்சல் பாதிப்பு