வரி கட்ட மறுக்கும் செங்கல் சூளைகள்

கோவை, நவ.20:  கோவை மாவட்டத்தில் பல செங்கல் சூளைகள் உள்ளாட்சிகளுக்கு உரிய வரி செலுத்தாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.கோவை மாவட்டத்தில் சோமையம்பாளையம், கணுவாய், சோமையனூர், 24 வீரபாண்டி, சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், தொண்டாமுத்தூர், கலிக்க நாயக்கன்பாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி, தேக்கம்பட்டி, கெம்மாரம்பாளையம், மருதூர், பொள்ளாச்சி ஜல்லிப்பட்டி, அர்த்தநாரிபாளையம், கம்மாளப்பட்டி, தேவம்பாடி, சோமந்துறை பகுதியில் செங்கல் உற்பத்தி செய்யும் சேம்பர் மற்றும் நாட்டு சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த செங்கல் சூளைகளில் தொழில் வரி வசூல் மந்தமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டிற்கு சோமையம்பாளையம், கணுவாய், சோமையனூர், 24 வீரபாண்டி, சின்னதடாகம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளில் இயங்கும் செங்கல் சூளைகளின் மூலமாக ஆண்டிற்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக வருவாய் குவிகிறது. ஆனால் இந்த சூளைகள் உள்ள கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. சின்னதடாகம் ஊராட்சி பகுதியில் கடந்த ஆண்டு வீட்டு வரியாக 3,75,200 ரூபாய், தொழில் வரியாக 2,77,618 ரூபாய், தொழில் உரிம கட்டணமாக 31,370 ரூபாய் எனவும், ஜி.எஸ்.டி 15,028 ரூபாய் எனவும் வசூலிக்கப்பட்டது. உள்ளாட்சிகளின் மொத்த வருவாய் 31,27,922 ரூபாய் எனவும், செலவீனம் 39,18,939 ரூபாய் எனவும் இருந்ததாக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்னதடாகத்தில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளின் மூலமாக முறையான தொழில் வரி, வருமான வரி வசூலிக்கப்படவில்லை. கணுவாய், சோமையனூர், 24 வீரபாண்டி, பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான்.

வரவை விட செலவை கூடுதலாக்கி ‘நஷ்டமான ஊராட்சி’ என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல் சூளைகளுக்கு உரிய தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் வசூலிக்கவேண்டும். செங்கல் உற்பத்திக்கு ஏற்ப வருமான வரி, ஜி.எஸ்.டி விதிக்கவேண்டும். உரிய வரியை முறையாக வசூலித்தால், பெரும் தொகை கிைடக்கும். இதன் மூலமாக கிராமங்களில் அடிப்படை வசதியை மேம்படுத்தியிருக்க முடியும். ஆனால் ஊராட்சி நிர்வாகங்கள் இதை செய்ய முன் வரவில்லை. ஜி.எஸ்.டி, வருமான வரித்துறையினரும் செங்கல் சூளைகளின் உற்பத்தி, வருவாய் விவரங்களை ஆய்வு செய்யவில்லை. ெசங்கல் விற்பனை, செங்கல் சப்ளை போன்றவற்றிக்கு முறையான ரசீது, ஜி.எஸ்.டி விதிக்கப்படவில்லை. விதிமுறை மீறல், முறைகேடுகளால் செங்கல் சூளை கிராமங்களில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல் சூளைகள் உள்ள கிராம ஊராட்சிகளின் ஆண்டு வருவாய் 25 லட்ச ரூபாய் முதல் 40 லட்ச ரூபாய் வரை மட்டுமே இருப்பதால் ரோடு, குடிநீர், தெருமின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேறாமல் இருப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

Related Stories:

>