தூத்துக்குடியில் கப்பல் ஊழியருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடி, நவ. 20:  தூத்துக்குடியில் கப்பல் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் காட்பிரே (26). சரக்கு கப்பலில் ஆயிலராக பணியாற்றி வரும் இவர், தற்போது விடுமுறைக்காக வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பைக்கை நிறுத்திய காட்பிரே, அதன் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு ஆட்டோவில் வந்த கும்பல், காட்பிரேவின் பைக்கை தட்டிச் சென்றனர். இதை காட்பிரே தட்டிக்கேட்டபோது அவருக்கும் அந்த ஆட்டோவில் இருந்த 4 பேர் கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த அந்த கும்பல், காட்பிரேவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றது. இதில் காயமடைந்த காட்பிரேவை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், எஸ்ஐ சிவராஜ் ஆகியோர், விசாரணை நடத்தி இதில் ஈடுபட்ட தூத்துக்குடி மினி சகாயபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஆக்னல் (36), அவரது நண்பர்களான சண்முகபுரத்தைச் சேர்ந்த சிலுவை (26), மோகன் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>