×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம்

நாமக்கல், நவ.14: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர், உரிய விண்ணப்ப படிவத்தை, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்  இன்று (14ம் தேதி) முதல் 20ம் தேதி வரை ₹10 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். தேர்தலில் போட்டியிட விரும்பும் பொறுப்பு மற்றும் இதர விபரங்களை பூர்த்தி செய்து, உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை வழங்க வேண்டும். நகர்மன்ற தலைவருக்கு போட்டியிட ₹25 ஆயிரம், நகர்மன்ற உறுப்பினருக்கு ₹5 ஆயிரம், பேரூராட்சி தலைவருக்கு ₹10 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினருக்கு ₹2,500,  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ₹10 ஆயிரம்,  ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு ₹5 ஆயிரம் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் பாதி தொகையை மட்டும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் காந்திசெல்வன் தெரிவித்துள்ளார்

Tags : DMK ,government ,
× RELATED திமுக., கொடியேற்று நிகழ்ச்சி