×

உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணிக்கு மருத்துவ பரிசோதனை

தொண்டாமுத்தூர்: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கல்யாணி என்ற வளர்ப்பு யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் கரையோரம் நடத்தப்படும் புத்துணர்வு முகாமில் கல்யாணியும் பங்கேற்பதுண்டு. இந்நிலையில், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் உத்தரவுப்படி யானை ஆராய்ச்சியாளரான டாக்டர் சிவகணேசன் தமிழகம் முழுவதும் உள்ள கோயில் யானைகளின் எடை, உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்து வருகிறார். நேற்று பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு வந்த டாக்டர் சிவகணேசன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவற்றின் பழக்கம், வழக்கம் மற்றும் நடவடிக்கைகளை கண்காணித்தார். யானையின் எடை, விரும்பி சாப்பிடும் உணவு, நினைவாற்றல், பாகனுக்கு கட்டுப்படுவது, பொதுமக்களிடம் அதன் செயல்பாடு என பல்வேறு வகையான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். மேலும் செரிமான தன்மை, யானையின் பாதம், நகம் போன்றவற்றையும் கூர்ந்து நோக்கி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். கல்யாணி குறித்த ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்ப உள்ளதாக டாக்டர் சிவகணேசன் தெரிவித்தார். …

The post உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி பேரூர் பட்டீஸ்வரர் கோயில் யானை கல்யாணிக்கு மருத்துவ பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Perur ,Pattieswarar Temple ,Thondamuthur ,Kalyani ,Parur Pattieswarar, Goo. ,Bhavani ,Mattupalayam ,Perur Pattieswarar Temple ,Elephant Wildman ,Court ,
× RELATED புகையிலை விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது