×

சிறுமியிடம் சில்மிஷம் போச்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளி கைது

கோவில்பட்டி, நவ.14: கோவில்பட்டி அருகே போக்சோ சட்டத்தில் கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோவில்பட்டி அருகேயுள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி மகன் சண்முகையா(30). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.  இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கட்டிட தொழிலாளியான சண்முகையாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Tags : Architect ,
× RELATED கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான...