×

குடும்ப தகராறில் விபரீதம் மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற கணவன் கைது: ஆதம்பாக்கத்தில் பரபரப்பு

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் குடும்பத் தகராறில் மனைவியை உயிரோடு எரிக்க முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ராஜன் (40). இவரது, மனைவி பஞ்சவர்ணம் (35). ராஜன் சிறு சிறு திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  சமீபத்தில் கூட செல்போன் திருட்டு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.இதனால், கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. நேற்று முன்தினமும் ஏற்பட்ட சண்டையில் பஞ்சவர்ணம்  உடலெங்கும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு  தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அங்கிருந்த  ராஜன் “நானே உன்னை கொளுத்தி விடுகிறேன்” கூறி சிகரெட் லைட்டரால்  தீ வைத்துள்ளார். புடவையில் தீப்பற்றியதும் வேதனை தாங்க முடியாமல்  பஞ்சவர்ணம் அலறியபடி தெருக்களில் இங்கும், அங்குமாக அலறி அடித்து ஓடினார்.

இதைப்பார்த்த  அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று தீயை அனைத்து பஞ்சவர்ணத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார்  மனைவியைக் கொலை செய்ய முயன்றதாக ராஜனை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED கேரள விபத்தில் பலியான துணை விமானி மனைவி கதறல் இது எனது கணவர் இல்லை