×

பிரான்மலையில் அன்னாபிஷேக விழா

சிங்கம்புணரி, நவ.13:  சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதினத்திற்கு உட்பட்ட பிரான்மலை கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அம்மன் கோயிலில் நேற்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் சிவலிங்கத்தின் மீது சாதம் பச்சை காய்கறிகள் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு சிவனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் விதமாக நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரளிப்பாறை அரவன் கிரி குகை அண்ணாமலையார் கோயிலிலும், சிவபுரிபட்டி சுயம்பரகேஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட சிவன்கோயில்களில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார்.

Tags : Anniversary Festival ,France ,
× RELATED ரஃபேல் ஜெட் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டது