×

ஊட்டி நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி துவக்க கோரிக்கை

ஊட்டி, நவ. 12: ஊட்டி - குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய சாலைகள் விரிவாக்க பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை முடித்துள்ள நிலையில், நகரிலும் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், அதேசமயம் சாலையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தற்போது ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் பிங்கர்போஸ்ட் முதல் கலெக்டர் அலுவலகம் வரை சாலை விரிவாக்க பணிகளை முடித்துள்ளது நெடுஞ்சாலைத்துறை. அதேபோல், கட்டிடங்கள், தடுப்பு சுவர்கள், விவசாய நிலங்கள் என அனைத்தும் இடித்து தள்ளப்பட்டு ஜேசிபி., கொண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.  ஊட்டி - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலிவியூ பகுதியில் இருந்து (கிராண்டப் சாலை) ஊட்டி நகரின் நுழைவு வாயில் பகுதியான பாம்பே கேசில் சந்திப்பு சாலை (ஐ பவுண்டேசன் மருத்துவமனை வரை) சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டது. இதனால், இச்சாலை தற்போது அகலமாக மாறியதால், வாகனங்கள் தங்கு தடையின்றி நகருக்குள் வருகின்றன. ஆனால், ஊட்டி - குன்னூர் சாலை மற்றும் கூடலூர் சாலையில் நகரை ஒட்டிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

தலையாட்டு மந்துடன் பணிகள் முடித்த நிலையல், அதற்கு பின் சாலை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில், அனைத்து வாகனங்கள் ஒன்றாக வந்து நொண்டிமேடு பகுதியில் நின்று விடுகின்றன. அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே, இச்சாலையில் நொண்டிமேடு முதல் சேரிங்கிராஸ் வரையில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அதேேபால், ஊட்டி - மைசூர் சாலையிலும் நகருக்குள் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Ooty ,National Highway ,
× RELATED கொச்சின்- தனுஷ்கோடி தேசிய...