×

உதவி கமிஷனர் கார் மோதி கம்பெனி ஊழியர் படுகாயம்

சென்னை: ராயபுரம் ஆதம் சாகிப் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (45). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் மொபட்டில் பட்டினப்பாக்கம் கெனால் பேங்க் சாலை அருகே சென்றபோது, எதிரே கோட்டூர்புரம் போலீஸ் உதவி கமிஷனர் சுதர்சனனின் கார் வந்தது.
காரை காவலர் வீரமணி (33) ஓட்டி வந்தார். சிக்னல் அருகே சென்றபோது, சுரேஷ் மொபட் மீது உதவி கமிஷனரின் கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, உதவி கமிஷனர் சுதர்சனன், காயமடைந்த சுரேஷை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Tags : Car collision company employee ,
× RELATED உதவி கமிஷனர் கார் மோதி கம்பெனி ஊழியர் படுகாயம்