×

மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவ கொடியேற்றம்

மயிலாடுதுறை, நவ.8: துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.மயிலாடுதுறை துலா உற்சவத்தை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதாணேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதன் ஆகிய சுவாமிகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு கடந்த மாதம் 18ம் தேதி ஐப்பசிமாத முதல்நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. ஐப்பசி 21ம் நாள் மாயூரநாதர் கோயில், வள்ளலார்கோயிலில் திருக்கொடியேற்றத்துடன் 10 நாள் உற்சவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயிலில் திருக்கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினரர். அங்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை மத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் (வள்ளலார்) கோயிலில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. வருகிற 13ம் தேதி திருக்கல்யாணமும், 15ம் தேதி தேரோட்டமும், 16ம் தேதி கடைமுக தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. மறுநாளான கார்த்திகை 1ம் தேதி முதல் முழுக்க நடைபெற உள்ளது.


Tags : Thula Utsavam ,Mayiladuthurai Mayuranathar Swamy Temple ,
× RELATED செம்பனார்கோவில் அடுத்த ஆக்கூர்...