×

பழங்குடியினர் மக்களை அச்சுறுத்தும் ரத்தசோகை

பந்தலூர், நவ. 8:பந்தலூர் அருகே பிதர்காடு ஓடோடும் வயல் பந்தகாப்பு ஆதிவாசி காலனியில் வசிக்கும் மக்கள் ரத்தசோகை நோய் பாதிக்கப்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு ஆதிவாசி காலனியில் ஆதிவாசி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரத்தசோகை எனப்படும் அனிமியா குறைபாடு நோய் தாக்கியுள்ளது.  இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர்.

போதிய இரும்பு சத்து மாத்திரைகள், ரத்தசோகையை போக்கும் உணவுகள் உட்கொள்ளாமல் அவர்கள் சோம்பலுடனே காணப்படுகின்றனர். இப்பகுதியில் கிராம சுகாதார செவிலியர்கள் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ ஆலோசனைகள் வழங்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனவே சுகாதாரத்துறையினர் சம்மந்தப்பட்ட ஆதிவாசி  கிராமங்களுக்கு சென்று  நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...