வாலாஜாபாத் அருகே நிறுத்தி வைத்த லாரி மாயம்

வாலாஜாபாத், நவ.8: வாலாஜாபாத் அருகே வீட்டின் அருகே நிறுத்திய லாரி திடீர் என மாயமானது.வாலாஜாபாத் அடுத்த முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சாரதி. இவருக்கு சொந்தமான கனரக லாரியை அவரே ஓட்டி வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லாரியை வீட்டின் அருகில் நிறுத்திவிட்டு,  சென்றார். நேற்று அதிகாலை லாரியை  எடுக்க வழக்கம்போல் வந்தபோது, லாரி  இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுடத்து அப்பகுதி முழுவதும்  லாரியை தேடினர். கிடைக்கவில்லை.இதுகுறித்து வாலாஜாபாத் போலீசில், சாரதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்கின்றனர்.

Related Stories:

>