×

மாணவர்களுக்கு போதையூட்டும் மாத்திரை விற்க கூடாது

அருப்புக்கோட்டை, நவ.7: போதையூட்டும் மாத்திரைகளை மாணவர்களுக்கு  விற்பனை செய்யக்கூடாது.  டாக்டரின் பரிந்துரையின்றி எந்த மருந்துகளையும்  விற்பனை செய்யக்கூடாது என்று, மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.   அருப்புக்கோட்டை டவுண் காவல் நிலையத்தில் நகரின் மருந்துக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட மருந்துக்கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் போதையூட்டும் மாத்திரைகளை மாணவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.  டாக்டரின் பரிந்துரையின்றி எந்த மருந்துகளையும் விற்பனை செய்யக்கூடாது.  போதையூட்டும் மாத்திரைகளை வாங்க மருந்து கடைக்கு வரும் மாணவர்கள் பற்றிய தகவலை டவுண் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். கருக்கலைப்பு சம்மந்தப்பட்ட மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக்கூடாது.  போதையூட்டும் மாத்திரைகளை பயன்படுத்தும் மாணவர்களை கண்டுபிடித்து மறுவாழ்வு தர போலீசாருக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.  14 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமியர்களுக்கு  டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்துகளையும் நேரடியாக வழங்கக்கூடாது.  மருந்துகடைகளின் பாதுகாப்பிற்காகவும், குற்றத்தடுப்பு சம்மந்தமாக போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலும் மருந்து கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.  இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சம்மந்தமாக மருந்துக்கடை விற்பனையாளர்கள் சுற்றறிக்கை வெளியிடவேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Tags :
× RELATED வத்திராயிருப்பு அருகே ட்ரோனில்...