×

பாலாம்பாடி செல்லும் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கும் வரத்து வாய்க்கால் தண்ணீர் சீராக செல்வதில் சிக்கல்

பெரம்பலூர், நவ.7:செங்குணம் கிராமத்திலிருந்து பாலாம்பாடி செல்லும் சாலை யோரம் ஏரிக்குச் செல்லும் வரத்துவாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளாலும், புதர்கள் மண்டியும் தண்ணீர் செல்ல வழியின்றி அடைபட்டுக் கிடப்பதை விரைவில் சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பெரம்பலூர் ஊராட்சி ஒன் றியத்திற்குஉட்பட்டது செங்குணம் ஊராட்சி. இந்த ஊரா ட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் செங்குணம் கிராமத்தில் இருந்து பாலாம்பாடி செல்லும் சாலையின் இடையில் ஒரு சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை செங்குணம் அண்ணா நகரில் இறந்துபோன நபர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சுடு காட்டின் அருகில் கிழக்கே ஓடை செல்கிறது. இந்த ஓடை செங்குணம் ஏரியின் கடைக்கால் பகுதியில் தொடங்கி இந்த சுடுகாடு ஓரமாக எழுமூர் ஏரிக்கு சென்றடைகிறது. மேலும் அண்ணா நகர் பகுதி உட்பட செங்குணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் கழிவுநீர் சாக்கடை கால்வாய் இந்த ஓடை யில் வந்துசேர்கின்றன.

அவ்வப்போது பெய்யும் மழை தண்ணீர் ஓடையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளும் நாள்தோறும் கழிவு கால்வாய் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளும் சுடுகாடு அருகேயுள்ள ஓடையில் தேங்கியுள்ளன.இதனால் இறந்த நபரை அடக்கம் செய்ய சுடுகாட்டி ற்கு வரும் மக்களும் இவ்வழியாக பாலாம்பாடிக்கு செ ல்லுகின்ற மக்களும் நாற்றத்தில் தவிக்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு அருகில் உள்ள விவசாய நிலங்களின் மண் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த கழிவுகளை அகற்றி சுத்தம் செய்து தர மாவட்ட நிர்வாகத்திற்கும், ஒன்றிய நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடு த்துள்ளனர்.


Tags : road ,Palampadi ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி