×

ஆவடி, ஜெ.பி எஸ்டேட் பகுதியில் குவிந்து கிடந்த குப்பை அகற்றம்

ஆவடி, நவ. 7: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெ.பி எஸ்டேட், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் குவிந்து கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்தனர். ஆவடி மாநகராட்சி 17வது வார்டில் ஜெ.பி எஸ்டேட், சரஸ்வதி நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள காலி இடங்களில் தொட்டிகள் வைக்கப்பட்டு குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், சில இடங்களில் தனியாருக்கு சொந்தமான காலி நிலத்திலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் சரிவர அள்ளாததால் மக்கி துர்நாற்றம் வீசியதுஇதோடு மட்டுமல்லாமல் குப்பையில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களை கடித்து பல்வேறு வகையான மர்ம காய்ச்சல்கள் பரவி வந்தன. மேலும் சுகாதார சீர்கேட்டாலும் பொதுமக்கள் சிக்கி தவித்தனர்.

இதுகுறித்து நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேற்று காலை சென்று  தெருக்களில் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினர். மேலும், அந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரம் பேணப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல், அப்பகுதியில் சுகாதார துறை அதிகாரிகள் தொடர்ந்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து ஜெ.பி எஸ்டேட், சரஸ்வதி நகர் பகுதிகளில் உடனடியாக குப்பைகளை அகற்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : JP Estate ,
× RELATED சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது