×

மதமாற்ற பிரசாரம் பெண் உட்பட 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

காடையாம்பட்டி, நவ.6: காடையாம்பட்டி அருகே மதமாற்றம் செய்ய வந்த தர்மபுரியைச் சேர்ந்த பெண் உட்பட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் காட்டூர், மோட்டூர், கோவிந்தகவுண்டனூர், மங்கானூர், குருவாளியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை கஞ்சநாயக்கன்பட்டி காட்டூர் பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் கிராம மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி  கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்று கூறி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் மடக்கி விசாரித்தனர்.

இதில், அவர்கள் தர்மபுரி டவுன் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் மற்றும் கிறிஸ்டீனா என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டு தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். பின்னர், அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்தச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED இறந்த பெண் அடையாளம் தெரிந்தது: 2 பேரிடம் விசாரணை