×

காலத்திற்கேற்ப மாற்றங்களை கையாளவேண்டும்

குமாரபாளையம், நவ.5: குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பொறியியல் கல்லூரியில் புதிய தொழில்நுட்ப அறிவு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா வாழ்த்தி பேசினார்.
அப்போது, அவர் பேசும்போது, பல்கலைக்கழகங்கள் வகுத்துள்ள பாடத்திட்டத்துடன் தொழில்துறையில் நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப திறமைகளையும் மாணவர்கள் கற்றுக்கொண்டால், வேலைவாய்ப்புகளை எளிதாக பெறலாம் என்றார்.
சென்னை ஆக்ரே நிறுவனத்தின் மனித வளத்துறை இயக்குனர் சித்தேஷ்ராம் பேசும்போது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் வியக்கத்தக்க வளர்ச்சியை பெற்று வருகிறது. தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அபரிதமாக உள்ளது. இந்த தொழில்நுட்ப மாற்றம் ஒன்றுதான் தொழில்துறையில் நிலையானது. இனிவரும் காலங்களில் தொழில்நுட்பங்கள் மேலும் மேம்பாடு அடையும். காலத்திற்கேற்ற மாற்றங்களை கையாளும் திறன்களை மாணவ -மாணவிகள் வளர்த்துக்கொள்வது அவசியமாகும் என்றார்.கருத்தரங்கில் வேலைவாய்ப்பு துறைத்தலைவர் ஜித்விக்னேஷ், நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், வெளிப்புற தொடர்பு மேலாளர் நாசர்கான் மற்றும் துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் தமிழரசு வரவேற்றார்.


Tags :
× RELATED ₹5 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்