×

அறம் மக்கள் நலசங்கம் சார்பில் 30 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 லட்சத்தில் நலத்திட்ட உதவி

திருப்பூர், நவ.5: அறம் மக்கள் நலசங்கம் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற விழாவில் 30 அரசு பள்ளிகளுக்கு ரூ.50லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தலைவர் சு.ராஜா, பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் வழங்கினார்.அறம் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் நலத்திடட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நிறுவன தலைவர் சு.ராஜா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். விழாவில் தர்மபுரியை சேர்ந்த தேவகிக்கு மருத்துவ உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பரபரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 பீரோக்கள், காங்கேயம் அரசு மேல்நிலைபள்ளிக்கு எல்இடி டிவி, நெசவாளர் காலனி நகராட்சி தொடக்கப்பள்ளி, பிச்சம்பாளையம் மாநகராட்சி பள்ளி உள்பட 30 அரசு பள்ளிகளுக்கு ரூ.50 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை நிறுவன தலைவர் சு,ராஜா வழங்கி பேசுகையில்,அறம் மக்கள் பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. ஏழை, எளியவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்காக செயல்பட்டு வருகிறது. வாழ்க்கை மாற வேண்டும் என நினைப்பவர்கள் சங்கத்தில் சேர வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். இந்த விழாவினை நடத்துவதற்கு ஏராளமான எதிர்ப்புகள் வந்தது. இருப்பினும் மக்களின் ஆதரவு இருப்பதால் இந்த விழா நடைபெறுகிறது. அறம் மக்கள் சங்கம் சார்பில் ஏராளமான திட்டங்களை அறிவிக்க உள்ளோம்.  

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்வதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பதால் அதிக அளவு உதவி செய்து வருகிறோம். அரசு பள்ளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம் என்றார்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் கலந்துகொண்டு பேசுகையில், அறம் சங்க செயல்பாடுகள் குறித்தும், வரும் காலங்களில் சங்கம செய்ய வேண்டியவை குறித்து விளக்கியும், சங்க செயல்பாடுகளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.பட்டிமன்றம், பரதநாட்டியம், பறை, இசை, நடனம் உள்ளிட்ட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி கவி பல்வேறு யோகாசனங்கள் செய்தார். அவருக்கு ரூ.35 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினர். திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டனர். விழாவில் மாநில இளைஞரணி தலைவர் ராம், மாநில துணைத்தலைவர் சாகுல்ஹமீது, மாநில துணைத்தலைவர் இளங்கோவன், மாநில பொருளாளர் பாபு, மாநில இணைச்செயலாளர் அறிவுமணி, மாநில துணைத்தலைவர் பால்ராஜ் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். சங்கம் தொடர்பாக நாளிதழ் வெளியிடப்பட்டு அங்கிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags : government schools ,
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...