×

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலக்கடலை விலை குறைவால் விவசாயிகள் கவலை மூட்டைக்கு ரூ.2,000 சரிந்தது மூட்டைக்கு ரூ.2,000 சரிந்தது

புதுக்கோட்டை, நவ.5: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலை மூட்டையின் விலை ரூ.2 ஆயிரம் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாணாவாரி பயிரான நிலக்கடலை விவசாயம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக மழையின்றி வறட்சி ஏற்பட்டது. இந்த வறட்சியின் காரணமாக மாணவாரி பயிர்கள் பயிரிடுவதில் இருந்து விவசாயிகள் முற்றிலும் வெளியேறினர். ஒரு சிலர் போர் வெல் அமைத்து மாணாவரி பயிர்கள் பயிரிட்டு வந்தனர். தொடர்ந்து மழையின்றி இருந்ததால் போர்வெல் வறண்டு போனது. இதனால் விவசாயிகள் முற்றிலும் பாதிப்படைந்தனர். இதனால் அவர்களும் மாணாவாரி பயிர்கள் பயிரிடுவதில் இருந்து வெளியேறினர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாணாவாரி பயிர்கள் விவசாயம் செய்வதில் முற்றிலும் தடைபட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை விவசாயத்திற்கு ஏற்றார்போல் தயார் செய்து மாணாவாரி பயிர்களை விதைத்தனர். குறிப்பாக துவரை, கடலை அதிக அளவில் பயிரிட்டனர். விதைப்பிற்கு பிறகு அவ்வப்போது மழை பெய்ததால் நல்ல நிலையில் கடலை, துவரை வளர்ந்து வந்தது. இதனால் காட்டு பகுதிகள் பசுமையாக காட்சியளித்து.இந்நிலையில் தற்போது துவரை நல்ல நிலையில் வளர்ந்து பூ விடும் நிலைக்கு உள்ளது. ஆனால் கடலை நல்ல முற்றி அவடைக்கு தயாரானது. இதனால் விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கடலையை விவசாயிகள் கடந்த சில வாரங்களாக அறுவடை செய்தனர். இந்த பணிக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து வந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடை அறுவடை செய்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நனைந்து விட்டது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில் கடையை செடியில் இருந்து ஆய்ந்து தற்போது வீட்டில் உள்ள களத்தில் காயவைத்து வருகின்றனர். சில விவசாயிகள் காயவைத்த கடலையை மூட்டை பிடித்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இப்படி கொண்டு செல்லும் கடலை ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.6 ஆயிரத்திற்கு விபனையாகிறது. இதனால் ரூ.2 ஆயிரம் குறைந்து விற்பனையானதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:தொடர்ந்து பல ஆண்டுகளாக மழை பொய்த்து போனதால் விவசாயிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வந்தோம். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த மழையின் காரணமாக கடலை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தோம். தற்போது அறுவடை செய்து வருகிறோம். சில இடங்களில் மழை பெய்ததால் கடலை நனைந்து விட்டது. தற்போது காயவைத்து விற்பனைக்கு தயார் படுத்தி வருகிறோம். காயவைத்த பிறகு ஓடுகளை நீக்கி வெறும் கடலை பருப்பை தனியாக பிரிக்கும் பணி நடைபெறும். இப்படி பிரித்தெடுக்கும் பருப்பின் 80 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையின் விலை ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது இதன் விலை ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக விவசாயம் இன்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் விளைச்சல் நன்றாக இருந்தும் மழையில் நனைந்ததால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வேளாண்மை துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Pudukkottai district ,Rs ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...