ஆலய நிலங்களுக்கு பட்டா வழங்க எதிர்ப்பு

திண்டுக்கல், நவ. 5: ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று இந்து முன்னணி மற்றும் இளைஞர் அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வந்து கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், ‘தமிழக அரசு ஆலய நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கிற்காக கொடுத்துள்ள பிரமாண வாக்குமூலம் பத்திரத்திலும் மேற்கொண்டவாறே உள்ளது. அந்த ஆணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் மேலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண வாக்குமூலத்தை திரும்ப பெற வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : temple lands ,
× RELATED கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல்...